» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் சமக தனித்து போட்டி : பொதுச் செயலளார் சரத்குமார் அறிவிப்பு

வெள்ளி 25, ஜனவரி 2019 3:59:39 PM (IST)சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என பொதுச் செயலாளர் சரத்குமார் அறிவித்துள்ளார்.  

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தென் மண்டல மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில மகளிர் அணிச் செயலளார் ராதிகா சரத்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சரத்குமார் கலந்து கொண்டு பேசியதாவது: கடந்த 94ஆம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசை அகற்றியது நான்தான். இது வரை சமக இரண்டு பெரிய கட்சிகளுடன் பயணித்துவிட்டது. 

தற்போது 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளது. இதற்கான உயர்மட்ட ஆலோசனக் கூட்டம் வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. வரும் பிப்ரவரி மாதத்தில் 234 தொகுதிகளுக்கும் சமக வேட்பாளர்கள் பட்டியில் தயாராகி விடும். நாம் கருத்து வேற்றுமையின்றி வெற்றி ஒன்றே குறிக்கோளாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நான் தாடி வளர்ப்பது குறித்து பலர் கேட்கிறார்கள். மோடி தாடி வளர்க்கும் போது நான் வளர்க்க கூடாதா? இன்று வாக்காளர் தினம், பெண்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்று கூறினார். 

கூட்டத்தில் ராதிகா சரத்குமார் பேசுகையில், வீட்டை நிர்வகிக்கும் பெண்கள் அரசியலுக்கு வர தயங்க கூடாது. பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டும். சமூக சேவையின் தொடர்ச்சிதான் அரசியல் என்றார். கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் சுந்தர், மாநில இளைஞர் அணி குரூஸ் திவாகர், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலளார் வில்சன், தெற்கு மாவட்ட செயலளார் தயாளன், மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திரா, ஜெயந்திகுமார், நெல்லை பொன்னுதாய், ஜெயலெட்சுமி, கன்னியாகுமரி ஜோனியா, சோபிதா ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

மணியன்Jan 29, 2019 - 12:30:28 PM | Posted IP 162.1*****

உங்க கட்சிக்கு நல்ல பேசும் திறமை வாய்ந்த நபர்களை உறுப்பினர் ஆகுங்கள், சாதி வட்டத்தில் இருந்து சமத்துவம் உள்ளது என மக்களுக்கு தெளிய படுத்துங்கள். தொடர்ந்து அரசியலில் இருக்கும் நீங்கள் ஆட்சியில் நடக்கும் விஷயங்களை நாடு நிலையாக விமர்சிக்கவும். தொடர் பிரச்சாரம் தேவை.

என் பெயர் தமிழ்Jan 26, 2019 - 03:32:32 PM | Posted IP 141.1*****

சரத்துக்கு வேற வேல இல்லையா..

PMoorthyJan 26, 2019 - 10:57:09 AM | Posted IP 162.1*****

Ennappa Sartthu enna achu

தமிழ்ச்செல்வன்Jan 25, 2019 - 05:36:51 PM | Posted IP 162.1*****

எத்தனை தொகுதியில் வேணும்னாலும் நிக்கலாம். தப்பில்ல. உங்க உரிமை. ஆனா வேட்பாளருக்கு எங்க போறது? அத யோசிக்கலியா அண்ணா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Anbu Communications

CSC Computer Education

Thoothukudi Business Directory