» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிணற்றில் தவறிவிழுந்து 6வயது சிறுவன் பரிதாப சாவு

வியாழன் 24, ஜனவரி 2019 12:14:28 PM (IST)

திருச்செந்தூரில் வீட்டில் உள்ள கிணற்றில் தூண்டில் போட்டு மீன்பிடிக்க முயன்றபோது தவறி விழுந்து 6வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் குமாரசாமி நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி புஷ்பலதா. இந்த தம்பதியரின்  மகன் சந்தனகுமார் (6). அங்குள்ள பள்ளியில் 2வது வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், சிறுவன் சந்தனகுமார் நேற்று தனது வீட்டில் உள்ள கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடிக்க முயன்றானாம்.  அப்போது எதிர்பாரதவிதமாக கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing

Anbu Communications

New Shape Tailors


Nalam Pasumaiyagam


Black Forest Cakes

CSC Computer Education



Thoothukudi Business Directory