» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல்துறை அலுவலகத்தில் சமூக ஊடக பிரிவு : எஸ்பி முரளி ரம்பா துவக்கி வைத்தார்.

செவ்வாய் 22, ஜனவரி 2019 3:25:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சமூக ஊடக பிரிவு  (Social Media Cell) என்ற தனிப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  முரளி ரம்பா  துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் செய்துவரும் சிறப்பான வேலைகளில் சில நிகழ்வுகள் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரிய வருகிறது. சில நிகழ்வுகள் பொதுமக்களின் கவனத்திற்கு வருவதில்லை. ஆகவே பெரும்பாலான பொதுமக்கள் அறியவேண்டும் என்பதற்காக இந்த சமூக ஊடகப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவானது சார்பு ஆய்வாளர் சத்திய நாராயணன் தலைமையில் காவலர்கள் முத்துமாரியப்பன், ரகுபதி மற்றும் அருண்ராஜ் ஆகியோரை கொண்டு செயல்படும். 

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் இரவு, பகல் பாராமல் பொதுமக்களின் நன்மைக்காக பாடுபடும் காவல்துறையினரின் அரிய செயல்களை பொதுமக்களுக்கு வாட்ஸ் ஆப், முகநூல் மற்றும் இதர ஊடகங்கள் மூலமாக இப்பிரிவினர் வெளிப்படுத்துவார்கள். அதே போன்று ஒவ்வொரு காவல் நிலையத்திலும் அந்தந்த காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் பொறுப்பில் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்குழுக்கள் காவல் நிலையத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளை பதிவிடுவார்கள். இப்பிரிவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய வாட்ஸ் ஆப் குழுக்களுடன், தங்களை இணைத்துக்கொண்டு மாவட்டத்தின் மொத்த தகவல்களை சேகரித்து வெளியிடுவார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


CSC Computer Education

New Shape Tailors


Joseph Marketing

Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory