» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தொகுதியில் போட்டியா? கனிமொழி எம்பி பேட்டி

வெள்ளி 18, ஜனவரி 2019 4:23:37 PM (IST)தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்தால் அதை ஏற்றுக் கொள்வேன் என கனிமொழி எம்பி கூறினார். 

தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்பி அளித்த பேட்டி: 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது திமுகவின் கொடூர புத்தி என பொன்ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். இட ஒதுக்கீட்டால் பயன் பெற்று வரக்கூடியவர்களை எதிர்த்துப் பேசுவது வருந்தத்தக்க விஷயம். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமில்ல அனைவரும் அதிமுக அரசு கலைய வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறார்கள். அதிமுக அரசாங்கம் மக்களுக்கான பிரச்சனைகளை புரிந்து கொள்ளவில்லை. அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பதிலே ஆர்வத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களுடைய பிரச்சினைகளை புரிந்து கொள்ளவில்லை. 

குறைந்த பட்சம் டாஸ்மாக் மதுபானக் கடைகளை குறைத்தால் நல்லது. அதிமுக ஆட்சி கார்ப்பரேட் ஆட்சி போன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்தால் அதை ஏற்றுக் கொள்வேன் என்றார். முன்னதாக தூத்துக்குடி வந்த கனிமொழி எம்பிக்கு, விமான நிலையத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷணன் எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். 


மக்கள் கருத்து

கண்ணன்Jan 24, 2019 - 05:38:16 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடிக்கு தேர்தல் வேண்டாம்

தமிழ்ச்செல்வன்Jan 18, 2019 - 06:51:49 PM | Posted IP 141.1*****

ஏற்கெனவே இருந்த MP க்கள் கிழிச்சி தள்ளிட்டாங்க. ஜெயசீலன் அப்பிடின்னு ஒருத்தர். தூங்கியே சம்பளம் வாங்குனார். ஜெயதுரை அப்பிடின்னு ஒருத்தர். அவர் என்னென்ன செஞ்சாருன்னு அவர்தான் சொல்லணும். நட்டர்ஜி அப்பிடின்னு ஒருத்தர். Sterlite கம்பெனியை எதிர்த்து மூச்சே விடல. இனி நீயா? வாம்மா! வா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Joseph Marketing

Anbu Communications


New Shape TailorsThoothukudi Business Directory