» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காணும் பொங்கலை முன்னிட்டு 2ஆயிரம் போலீசார் பாதுகாப்பு: எஸ்பி முரளி ரம்பா பேட்டி

திங்கள் 14, ஜனவரி 2019 3:57:03 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் காணும்பொங்கலை முன்னிட்டு 28 சுற்றுலா மையங்களில் 2ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக எஸ்பி முரளி ரம்பா தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்பி முரளி ரம்பா பொதுமக்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழவேண்டும் என்று பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மேலும், அவர் "தூத்துக்குடி மாவட்டத்தில் காணும்பொங்கல் (16.01.2019) அன்று பொதுமக்கள் 28 இடங்களுக்கு சுற்றுலா சென்று வருவது, அவ்வாறு செல்லும் பொதுமக்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்றுவர 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

சுற்றுலா தலங்கள், பேரூந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சாதாரண உடைகளில் ஆண், பெண் காவலர்கள் ரோந்து சென்று தீவர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை வேகமாக ஓட்டுவது, இரு சக்கர வாகனத்தில் 2 நபருக்கு மேல் அதிகமாக செல்பவர்கள், பொது இடங்களில் அமர்ந்து மது அருந்தி பொது மக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். 

தூத்துக்குடி மாவட்டத்தில் 28 இடங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். அதன்படி தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துநகர் கடற்கரை மற்றும் நேரு பூங்கா, தென்பாகம் காவல் நிலையத்தில் ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா, முத்தையாபுரம் காவல் நிலையத்தில் கோவளம் கடற்கரை, தெர்மல் நகர் காவல் நிலையத்தில் தெர்மல்நகர் கடற்கரை, முயல் தீவு, தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் தாளமுத்துநகர் கடற்கரை, புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கோரம்பள்ளம் குளம் மற்றும் அந்தோணியார்புரம், முறப்பநாடு காவல் நிலையத்தில் அகரம் தாமிரபரணி ஆற்றங்கரை, 

திருச்செந்தூர் காவல் நிலையத்தில் ஆலந்தலை கடற்கரை, திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் திருச்செந்தூர் கோவில் கடற்கரை, ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காயல்பட்டிணம் கடற்கரை, குலசேகரப்பட்டிணம் காவல் நிலையத்தில் குலசேகரப்பட்டிணம் கடற்கரை, மணப்பாடு கடற்கரை, குரும்பூர் காவல் நிலையத்தில் மேலபுதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில், நாலுமாவடி காமராஜ் பள்ளி, ஏரல் காவல் நிலையத்தில் ஏரல் அருணாச்சல சாமி கோவில், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் அரண்மனை, 

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் செண்பகவள்ளியம்மன் கோவில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கதிரேசன் கோவில், அனுமன் பூங்கா கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் குருமலை அய்யனார் கோவில், கழுகுமலை காவல் நிலையத்தில் கழுகுமலை ஸ்ரீகழுகாசலமூர்த்தி கோவில், கழுகுமலை பூங்கா, கயத்தாறு காவல் நிலையத்தில் கட்டபொம்மன் மணிமண்டபம், சூரங்குடி வேம்பார் கடற்கரை, நாசரேத் ஸ்ரீபுன்னை ஸ்ரீசீனிவாச பெருமாள் கோவில், தட்டார்மடம் செட்டிவிளை மணல் மாதா கோவில் ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் சுற்றுலா சென்று வருவது வழக்கமாக உள்ளது என்றும் பொதுமக்கள் காவல்துறை உதவிக்கு அலைபேசி எண் 9514144100 -க்கு தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார். மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சத்திய நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து

TamilanJan 15, 2019 - 04:26:51 AM | Posted IP 162.1*****

கொட நாடு எஸ்டேட் பாது காப்பாக உள்ளதா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Anbu CommunicationsNalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory