» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நள்ளிரவில் வாகனங்களை நொறுக்கிய மர்ம கும்பல் : தூத்துக்குடியில் பரபரப்பு

திங்கள் 14, ஜனவரி 2019 10:29:45 AM (IST)தூத்துக்குடியில் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி, கார் கண்ணாடிகளை நள்ளிரவில் உடைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் பாளையங்கோட்டை ரோடு மூன்றாவது மைல் மையவாடி பின்புறம் அமைந்துள்ள டி.எம்.பி காலனியில் உள்ள காவல்துறையினர் வாகனங்கள் பழுது நீக்கும் தனியார் ஒர்க்ஸ் ஷாப் முன்பு ஒரு லாரி உட்பட பழுது நீக்க சாலையோரம் நிறுத்தியிருந்த 5 கார்கள் உள்ளிட்ட 9 வாகனங்களின் கண்ணாடிகளை நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. 

கார் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு ஒடி வந்த அக்கம் பக்கத்தினரை கண்டவுடன் கண்ணாடியை உடைத்த மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த பீதி அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Nalam PasumaiyagamCSC Computer Education


Joseph Marketing

Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory