» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாநில அளவிலான ஹாக்கி போட்டி: லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி அணி முதலிடம்

ஞாயிறு 13, ஜனவரி 2019 10:00:12 AM (IST)மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதலிடம் பிடித்தது. 

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டி திருச்சி மாவட்டம், தொட்டியம் கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டு நாள்கள் நடைபெற்றது.  இதில், கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி அணி பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் அணியை 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநர் சிவராஜ், பயிற்சியாளர் சிவனேசன் ஆகியோரை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம், கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


CSC Computer Education

crescentopticals

New Shape Tailors

Joseph MarketingThoothukudi Business Directory