» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேசிய இளைஞர் தினம்: சமத்துவப் பொங்கல் விழா

ஞாயிறு 13, ஜனவரி 2019 9:53:46 AM (IST)கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி கோவில்பட்டி ரோட்டரி சங்கம் பத்திரகாளியம்மன் கோவில் மாதர் சங்கம் சார்பில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பாரம்பரிய கலாச்சார சமத்துவப் பொங்கல் விழா பள்ளி வளாகத்தில் வைத்து நடைப்பெற்றது.

ஆண்டுதோறும் ஜனவரி 12-ம் தேதி சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை தேசிய இளைஞர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சுவாமி விவேகானந்தரின் 157வது பிறந்தநாளை முன்னிட்டு நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சுவாமி விவேகானந்தரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி மாட்டுவண்டியில் வலம்வந்து சமத்துவப்பொங்கல் செய்தனர். பின்னர் பாடல்பாடி கோலாட்டம் கரகாட்டம் ஓயிலாட்டம் ஆடி பானை உடைக்கும் போட்டியில் கலந்து கொண்டனர். விழாவிற்கு நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் செல்வி பத்திரகாளியம்மன் கோவில் மாதர் சங்க தலைவி ராஜேஸ்வரி தங்ககாளிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பள்ளி ஆசிரியை மலர்க்கொடி வரவேற்றார். கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ஆசியாபார்ம்ஸ் பாபு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். விழாவில் ரோட்டரி சங்க செயலாளர் ரவிமாணிக்கம் திருவைகுண்டம் சமுகதணிக்கை வட்டாரவள அலுவலர் முத்துமுருகன் பள்ளிக்குழு உறுப்பினர்கள் மணிக்கொடி சத்தியமூர்த்தி பொன்ராமலிங்கம் ராஜா அமேரேந்திரன் பத்திரகாளியம்மன் கோவில் மாதர் சங்க உறுப்பினர்கள் கூடலிங்கம் சரோஜா லைலாபிராபாகரன் கமலா ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியை கீதாமணி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை  ஆசிரியர்கள் சாந்தினி ஜோதி தொகுத்து வழங்கினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Anbu Communications

Black Forest CakesCSC Computer Education

Thoothukudi Business Directory