» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துறைமுகத்தில் ஓட்டுநர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்

ஞாயிறு 13, ஜனவரி 2019 9:42:53 AM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் 2நாட்கள் நடைபெற்ற சரக்குப் பெட்டக லேசிங் தொழிலாளர்கள் மற்றும் பிரைம் மூவர் ஓட்டுநர்கள் போராட்டம் நேற்று கைவிடப்பட்டது.

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் உள்ள பிஎஸ்ஏ சிகால் சரக்குப் பெட்டக லேசிங் தொழிலாளர்கள் மற்றும் பிரைம்மூவர் ஓட்டுநர்கள் தங்களுக்கு சட்டபூர்வ உரிமைகள் பாதிக்காத வகையில் ஊதிய குறைப்பும், வேலை நாள்கள் குறைப்பும் இல்லாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என கடந்த மாதம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில், சரக்குப் பெட்டகத்தில் பணிபுரியும் 98 பேருக்கு வெள்ளிக்கிழமை துறைமுக நுழைவுச் சீட்டு நீட்டிப்பு வழங்காததால் அவர்கள் தொடர்ந்து பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

இதையடுத்து, தொழிலாளர்கள் அனைவரும் காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கினர். 2வது நாளாக நேற்று போராட்டம் தொடர்ந்ததையடுத்து, பிஎஸ்ஏ சிகால் சரக்குப் பெட்டக நிறுவன உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நுழைவுச் சீட்டு அனுமதி 10 நாள்களுக்கு நீட்டித்து வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

New Shape Tailors


CSC Computer Education

crescentopticals



Thoothukudi Business Directory