» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

ஞாயிறு 13, ஜனவரி 2019 9:16:50 AM (IST)

சாத்தான்குளம் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்..

தூத்துக்குடி மாவட்டம்,  சாத்தான்குளம் வீர இடக்குடி தெருவைச் சேர்ந்தவர் மூக்காண்டி மகன் மணிகண்டன் (38). ஆட்டோ டிரைவரான இவரை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். தசரா திருவிழா வரவு செலவு கணக்கு கேட்டது தொடர்பாக மணிகண்டன் கொலை செய்யப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த செல்லப்பா, இசக்கிமுத்து, கிங்ஸ்டன் ஜெயசிங், சுதர்சன் வினோத் என்ற சாம் ஆகிய 4 பேரை சாத்தான்குளம் போலீசார் கைது செய்தனர்.

மணிகண்டன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சாத்தான்குளம் ரஸ்தா தெருவைச் சேர்ந்த மந்திரம் மகன் ஆட்டோ டிரைவரான மற்றொரு மணிகண்டனை (27) போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பதுங்கி இருந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் கைது செய்து, சாத்தான்குளம் அழைத்து வந்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

New Shape TailorsCSC Computer EducationNalam Pasumaiyagam

Joseph MarketingThoothukudi Business Directory