» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனுமதியின்றி மோட்டார் சைக்கிள் பேரணி: 35 பேர் கைது

ஞாயிறு 13, ஜனவரி 2019 9:01:56 AM (IST)

கயத்தாறில் அனுமதியின்றி மோட்டார் சைக்கிள் பேரணியில் ஈடுபட முயன்ற 35 பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணி சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி, பாஜக மாவட்டச் செயலர் சிவந்தி நாராயணன் தலைமையில், கயத்தாறு அகிலாண்டேஸ்வரி கோயில் முன்பிருந்து புறப்பட தயாரானது. காவல் துறையின் அனுமதியின்றி இப்பேரணி புறப்பட இருந்தது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், பேரணியில் ஈடுபட முயன்ற 35 பேரையும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Nalam Pasumaiyagam

Anbu Communications




Black Forest Cakes




Thoothukudi Business Directory