» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர்கள் : சுற்றி வளைத்து பிடித்து பொதுமக்கள்

சனி 12, ஜனவரி 2019 8:52:41 PM (IST)




கோவில்பட்டியில் பெயிண்ட் கடையில் இருந்த பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர்களில் ஒருவரை சுற்றி வளைத்து பொதுமக்கள் பிடித்தனர். 

கோவில்பட்டி தெட்சிணாமூர்த்தி பிள்ளையார் கோவில் தேரு அருகே மெயின் சாலையில் பெயிண்ட் கடை வைத்து நடத்தி வருபவர் சின்னசாமி. சம்பவத்தன்று இவரது கடைக்கு 2 வாலிபர்கள் தங்களுக்கு 3 வீடுகள் இருப்பதாகவும், அதற்கு பெயிண்ட அடிக்க வேண்டும் என்றும், நல்ல பெயிண்டர் இருந்தால் தெரிவிக்கும் படியும், பெயிண்ட்ங்களும் வேண்டும் என்று கூறியுள்ளனர். சின்னசாமி நாளை வாருங்கள், பெயிண்ட்ரை வரச்சொல்வதாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இன்று மீண்டும் அந்த வாலிபர்கள் இருவரும் பெயிண்ட் கடைக்கு வந்துள்ளார். அப்போது சின்னசாமி மனைவி பகவதி என்பவர் மட்டும் கடையில் இருந்துள்ளார். அவரிடம் இருவரும் பெயிண்ட் வகைகள் பற்றியும், பெயிண்டர் பற்றி கேட்டு விட்டு சென்றுள்ளனர். இருவரும் சென்ற சிறிது நேரத்தில் தனது செல்போன் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்த பகவதி, கடையில் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, 2 நாள்களாக கடைக்கு வந்த வாலிபர்கள் செல்போனை எடுத்து சென்றது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து பகவதி தனது கணவர் சின்னசாமி மற்றும் அவரது மகன் போத்திராஜ்க்கு தகவல் தெரிவித்துள்ளார். இருவரும் சென்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் சிசிடிவியில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசாரிடம் தந்தையும், மகனும் சென்ற போது, தீயணைப்பு நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் செல்போன் திருடி சென்ற வாலிபரில் ஒருவர் இருப்பதை கண்டு அதிர்ச்சிடையந்துள்ளனர். அந்த வாலிபரை பிடிக்க முயன்ற போது தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த மக்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து, மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் பிடிப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் பெயர் கார்த்திக் என்பதும், கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தினை சேர்ந்தவர் என தெரிய வந்தது. 

கார்த்திக் ஒரு தனியார் வீட்டு உபயோக பொருள்கள் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 15 தினங்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்று விட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் கார்த்திக்குடன் வந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட மற்றொரு வாலிபர் கணேஷ்பிரபு என்பதும், இவர் சென்னையில் கார் டிரைவராக பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரும் தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள தனியார் விடுதியில் 2 நாள்களாக அறை எடுத்து தங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கணேஷ்பிரபுவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing


CSC Computer Education

crescentopticals



Thoothukudi Business Directory