» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை : ஏராளமான பெண்கள் பங்கேற்பு

சனி 12, ஜனவரி 2019 6:43:08 PM (IST)




தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 

சண்முகபுரம் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தாய்வீட்டு சீதனமாக எவர்சில்வர் வாளியில் பொங்கல் பொருட்களும் வழங்கப்பட்டு உலக அமைதி மழைவளம் பெய்து நல்ல ஆரோக்கியத்துடன் தொழில்வளம் பெற்று வாழ வேண்டி 351 திருவிளக்கு பூஜையில் பஜனை பாடலுடன், பத்திரகாளி, மாரியம்மாள், உச்சி மாகாளி அம்மனுக்கு அலங்காரத்துடன் சிறப்பு தீப ஆராதனையுடன் நடைபெற்றது. 

பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி ஆறுமுகசாமி செய்திருந்தார். திருவிளக்கு பூஜையில் மகளிர் அணியினர் கோவில் நிர்வாகிகள், பெண்கள் உள்ளிட்ட திரளானோர்  கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes


New Shape Tailors

Nalam Pasumaiyagam



Joseph Marketing

CSC Computer Education



Thoothukudi Business Directory