» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பால் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் : ஆவின் தலைவர் சின்னத்துரை தகவல்.

சனி 12, ஜனவரி 2019 3:58:41 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என ஆவின் தலைவர் ந.சின்னத்துரை கூறினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக அறிவித்த உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகை ரூ.1000-ம் மற்றும் பால் உபபொருட்கள் நெய் ½ கிலோ, மைசூர்பா ½ கிலோ, பால்கோவா ¼ கிலோ மற்றும் நறுமணபால் ஆகியவற்றை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என். சின்னத்துரை வழங்கி ஆவின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பால் நுகர்வோர்களுக்கு பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.

பின்னர் அவர் கூறுகையில், பால் விற்பனை அதிகரிக்கவும், பொது மக்களுக்கும் எந்த நேரத்திலும் தரமான பால் கிடைக்கவும் விற்பனை முகவர்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் கொள்முதல் செய்து வழங்கவும். கால்நடைகளுக்கு பரவி வரும் நோய்களை தடுக்கவும், நோய் வராமல் பாதுகாக்கவும் மருந்து கொள்முதல் செய்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓன்றியத்தில் பால் விற்பனை 42000 லிட்டரில் இருந்து 45000 லிட்டராக உயர்ந்துள்ளது. 

மேலும் தயிர் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டும், சுகாதாரமுறையில் கப்பில் அடைக்கப்பட்ட தயிர் விற்பனை செய்யப்படவுள்ளது. பால் விற்பனை இலக்கு 45,000 லிருந்து 50000 லிட்டராக இலக்கு நிர்ணயிக்கவும், பால் உபபொருட்கள் விற்பனை 90 இலட்சம் ருபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதை 1.5 கோடி என இலக்கு நிர்ணயித்து பால் உபபொருட்கள் விற்பனையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். 

11.01.2019 அன்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டத்திலுள்ள நெடுங்குளம் கிராம பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு 50 கறவை மாட்டுக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 250 லிட்டர் பால் உற்பத்தி அதிகரிக்கும். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் 500 கறவை மாட்டு கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒன்றிய பால் உற்பத்தி நாள் ஒன்றுக்கு சுமார் 3000 லிட்டர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

மேலும் 25 ஆண்டுகள் விபத்தின்றி வாகனம் ஓட்டி அப்பழுகற்ற முறையில் பணியாற்றிய ஓட்டுநர்களுக்கு 4 கிராம் தங்க நாணயம் பரிசாக ஆவின் தலைவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர் ரங்கநாததுரை, உதவி பொது மேலாளர் (P & I) அருணகிரிநாதன், உதவி பொது மேலாளர் (பொறி) திவான் ஒளி, மேலாளர் (விற்பனை) சாந்தி, அனுசியாசிங், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Joseph Marketing

Anbu Communications

Black Forest CakesNalam Pasumaiyagam


CSC Computer EducationThoothukudi Business Directory