» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ.சி துறைமுக சபை தலைவராக இராமச்சந்திரன் பொறுப்பேற்பு

சனி 12, ஜனவரி 2019 3:24:22 PM (IST)



வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவராக தா.கி. இராமச்சந்திரன் இன்று பொறுப்பு ஏற்று கொண்டார்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவராக தா.கி.இராமச்சந்திரன், இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 1991-ம் ஆண்டு இந்திய ஆட்சி பிரிவு (தமிழ்நாடு) அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர். வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் பொறுப்பேதற்கு முன்பு இவர் இந்து சமைய அறநிலையத் துறை ஆணையராக பணியாற்றியுள்ளார்.

மேலும் இராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் ஆட்சியாளராகவும், தமிழக நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்களின் செயலாளராகவும், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறையின் முக்கிய செயலாளராகவும், தமிழ்நாடு செய்திதாள் மற்றும் ஆவணங்கள் துறையின் நிர்வாக இயக்குநராகவும், தமிழ்நாடு பயிற்சி துறையின் பொது இயக்குநராகவும், ஆவீன்பால் துறையில் நிர்வாக இயக்குநராகவும் மற்றும் துணை ஆணையர், சென்னை மாநகராட்சி, திட்ட இயக்குநர் தமிழ்நாடு சாலைதுறை திட்டம், திட்ட இயக்குநர்- சர்வ ஷிக்ஷா அபியன் ஆகிய துறைகளின் கீழ் பணியாற்றியுள்ளார்.
 
இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக அரசாங்கத்தினால் பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் கராக்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் தொழில்நுட்ப இளங்கலை பட்டமும் மற்றும் டெல்லியிலுள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் கணினி அறிவியல் பாடபிரிவில் முதுகலை பட்டமும் பெற்றவர். பிரின்ஸ்டன் பல்கலைகழகத்திலுள்ள பொது கொள்கை பாட பிரிவில் முதுகலை பட்டமும் பெற்றவர். 

மேலும் அவர் கல்வி, மின்வழிகற்றல், மின்-ஆளுமை மற்றும் தகவல் தொழில்நுட்ப கொள்கை, நகர்புற வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.தா.கி.இராமச்சந்திரன், ஒரு சிறந்த கர்நாடக இசை வாய்ப்பாட்டு கலைஞர் ஆவார். மேலும் இவர் சென்னை மற்றும் இதர மாநிலங்களிலும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேற்கூறிய தகவலை வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம், இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து

ராஜாJan 14, 2019 - 03:48:32 PM | Posted IP 141.1*****

வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications




New Shape Tailors

Joseph Marketing

CSC Computer Education


Black Forest Cakes

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory