» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சக்தி வித்யாலயா பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

சனி 12, ஜனவரி 2019 12:44:22 PM (IST)



தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா பள்ளியின் நிறுவனர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோலப் போட்டி, ஓவியப் போட்டி நடைபெற்றது. கோலப் போட்டிக்கு AMK தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை ஆனந்தசெல்வி மற்றும் பள்ளி ஆசிரியை பியூலா கெப்சி, சுபலெட்சுமி ஆகியோர் தேர்வாளர்களாக வந்து தேர்வு செய்தனர்.

மாணவ, மாணவிகள் தமிழ்நாடு பாரம்பரியத்தை காக்கும் நோக்கத்தில் வேஷ்டி-சட்டை, பாவாடை-தாவணியில் பள்ளிக்கு வந்து பொங்கல் வைத்தனர். கோலப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற முதல் மூன்று பேர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தது. அதன்பின் சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ஜெயாசண்முகம் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.


மக்கள் கருத்து

தமிழன்Jan 12, 2019 - 01:38:47 PM | Posted IP 172.6*****

தமிழனின் பாரம்பரியபடி சூரியபகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கலிட்டு, படையலிட்டு சூரியபகவானை வணங்கிய மாணவ மாணவிகளை போற்றுவோம்....தமிழனின் பண்பாடும், கலாச்சாரமும், தமிழனின் சனாதன (ஹிந்து) மதமும் வளரட்டும்.....அன்பு பெருகட்டும் ...ஒற்றுமை நிலைக்கட்டும்....அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

CSC Computer Education


New Shape Tailors

crescentopticals



Thoothukudi Business Directory