» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

சனி 12, ஜனவரி 2019 12:25:05 PM (IST)



தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தமிழர் திருநாளையொட்டி மாணவ, மாணவியர்கள் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தமிழர் திருநாளையொட்டி ஒவ்வொரு வகுப்புவாரியாக மாணவ, மாணவியர்கள் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து பொங்கலிட்டு இயற்கையை வழிபட்டனர்.ஓவ்வொரு வகுப்பு வாரியாக மொத்தம் 33 பானைகளில் பொங்கலிட்டு மாணவ, மாணவியர்கள் பொங்கலோ பொங்கல் வாழ்த்துடன் கல்லூரி வளாகம் சமத்துவத்தை முன்னிறுத்தி தமிழனின் பாரம்பரியத்தை பறைசாற்றியது.  கல்லூரி சார்பில் கல்லூரி அலுவலகத்தின் முன்புள்ள காமராஜருக்கு மரியாதை செலுத்தும்வண்ணமாக பொங்கலிட்டனர்.  

இப்பொங்கலினை கல்லூரியின் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் கரும்பு, பனை ஓலை தோரணங்களுடன் காய்கறி வகைகள் பல படைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.  பொங்கலினை அனைவருக்கும் வாழை இலையில் வைத்து பரிமாறினர்.  பொங்கல் இடும் வைபத்தினை சிறப்பாக செய்திருந்த அனைவருக்கும் கல்லூரி அலுவலர்கள் சரவணன், மகேஷ்வரி மற்றும் அர்ச்சனா சிறப்ப நினைவு பரிசுகளை வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை அனைத்து துறைத் தலைவர்களும், அலுவலர்களும் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து

தமிழன்Jan 12, 2019 - 01:38:32 PM | Posted IP 172.6*****

தமிழனின் பாரம்பரியபடி சூரியபகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கலிட்டு, படையலிட்டு சூரியபகவானை வணங்கிய மாணவ மாணவிகளை போற்றுவோம்....தமிழனின் பண்பாடும், கலாச்சாரமும், தமிழனின் சனாதன (ஹிந்து) மதமும் வளரட்டும்.....அன்பு பெருகட்டும் ...ஒற்றுமை நிலைக்கட்டும்....அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


New Shape Tailors


Black Forest Cakes

CSC Computer Education

Joseph Marketing

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory