» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதுரை - தூத்துக்குடி சாலையில் 30% சுங்கக் கட்டணம் குறைப்பு : உயர்நீதிமன்றம் அதிரடி

சனி 12, ஜனவரி 2019 12:02:47 PM (IST)

மதுரை - தூத்துக்குடி சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் 30% சுங்கக் கட்டண குறைப்பை வழங்கிய தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

மதுரை - தூத்துக்குடி இடையிலான சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாக குற்றம்சாட்டிய அருப்புக்கோட்டை தனியார் பேருந்து உரிமையாளர்கள், சுங்கக் கட்டணம் முழுமையாக செலுத்தப்படுவதை குறிப்பிட்டு மனுத் தாக்கல் செய்தனர். இதை விசாரித்த தனி நீதிபதி, அவ்வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் 30 சதவிகிதம் சுங்கக் கட்டணம் குறைத்து செலுத்த உத்தரவிட்டார்.

இதற்கு தடை விதிக்கக்கோரி, எளியார்பத்தியில் உள்ள சுங்கச் சாவடி சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 30 சதவிகிதம் சுங்கக் கட்டணம் குறைத்து செலுத்தும் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். மேலும் சாலையை சீரமைக்கும் வரை கட்டண குறைப்பு தொடரும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து

ராஜாJan 14, 2019 - 03:49:23 PM | Posted IP 141.1*****

சூப்பர்

அருண்Jan 12, 2019 - 10:56:15 PM | Posted IP 108.1*****

நல்லா காசு கிடைச்சா நல்லா பராமரிப்பு பண்ணணும்டா நாய்ங்களா... வாங்கி வாங்கி டவுசர் பாக்கெட்ல போட்டா இப்படித்தான்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals

Joseph Marketing

CSC Computer Education

New Shape Tailors



Thoothukudi Business Directory