» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து: மகன் பலி - தாயார் படுகாயம்!!

சனி 12, ஜனவரி 2019 11:32:40 AM (IST)

சாத்தான்குளம் அருகே வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் அரிராமன் என்பவர் உயிரிழந்தார். அவரது தாயார் படுகாயம் அடைந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், தட்டார்மடம் அருகிலுள்ள படுக்கப்பத்து, எள்ளுவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் அரிராம கிருஷ்ணன்(50). இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இவரது தாயார் பிச்சைராமகணி (80). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் இவர்களது வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்து தீவிபத்து ஏற்ப்பட்டுள்ளது.

இதில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அரிராம கிருஷ்ணன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவரது தாயார் பிச்சைராமக்கனிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்  சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தீவிபத்தில் அரிராம கிருஷ்ணனின் மனைவியும், மகளும் காயமின்றி உயிர்தப்பினர். இச்சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Anbu Communications

Black Forest Cakes


Nalam Pasumaiyagam






Thoothukudi Business Directory