» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஐந்து வருடங்களாக போடப்படாமல் உள்ள சாலை : விபத்தில் சிக்கும் வாகனஓட்டிகள்

சனி 12, ஜனவரி 2019 11:27:52 AM (IST)
மாப்பிள்ளையூரணி பகுதியில் 5 வருடங்களாக சாலை போடப்படாததால் பல்வேறு விபத்துக்கள் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் மாப்பிள்ளையூரணி பகுதி அமைந்துள்ளது. இதற்கு மெயின் ரோட்டிலிருந்து பிரிந்து உள்ளே செல்ல 1 கிமீ ரோடு உள்ளது. சேதுபாதை ரோடும் 1 கிமீ உள்ளது. ஊருக்குள் போகாமல் செல்ல பைபாஸ் சாலை 2 கிமீ தூரத்திற்கு உள்ளது. இந்த 2 கிமீ ரோட்டில் சேதுபாதை ரோட்டிலிருந்து காமராஜ் பள்ளி வரை 1 கிமீ தூரத்திற்கு மட்டுமே சாலை போடப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதியில் சாலை கடந்த 5 வருடங்களாக போடப்படாததால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் மேடு பள்ளத்தில் குலுங்கி தடுமாறி செல்கின்றன. 

குறிப்பாக திருப்பங்கள் உள்ள இடத்தில் சாலை வசதி மோசமாக இருப்பதால் கார், மோட்டார்பைக் ஆகியவை அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. தொடர் விபத்துக்களால் அப்பகுதியில் செல்வோர் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது. ஆகவே பொதுமக்கள், வாகனஓட்டிகள் நலனை கருத்தில் கொண்டு உடனே புதிய சாலை போட வேண்டுமெனவும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் நெடுஞ்சாலைத்துறைக்கு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes

CSC Computer Education

Anbu Communications


Nalam PasumaiyagamThoothukudi Business Directory