» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நடைபாதை வியாபாரிகளிடம் அபராதம் வசூல் : மாநகராட்சி அதிகாரிகள் கெடுபிடி

சனி 12, ஜனவரி 2019 10:53:50 AM (IST)தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகையையொட்டி சாலையோரங்களில் பணங்கிழங்கு, கோலமாவு போன்றவற்றை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட மக்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாராகி  வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு தேவையான பல்வேறு பொருட்களையும் வாங்கும் பணியில் மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் காய்கறிகள், கரும்பு, தலைப் பொங்கல் சீர்வரிசை பித்தளை பாத்திரங்கள், போன்ற பொருட்களின் விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது. இதுபோல், தூத்துக்குடியில் சாலையோரங்களில்  பணங்கிழங்கு, பணை ஓலை போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கிராம மக்கள் தங்களது விளை பொருட்களான பணங்கிழங்கு, ஓலை, மஞ்சள்குலை, போன்றவற்றை சாலையோரத்தில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகே பிளாட்பாரத்தில் பொருட்களை விற்பனை செய்து கொ்ணடிருந்த வியாபாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அபராதம் விதித்தனர். இதனால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். ஏற்கனவே காவல் துறையினர் தங்களுக்கு ரூ.300 அபராதம் விதித்துள்ளதாகவும், தற்போது மாநகராட்சி அதிகாரிகளின் கெடுபிடியால் தங்களது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வியாபரிகள் கூறுகின்றனர். 


மக்கள் கருத்து

தமிழன்Jan 13, 2019 - 12:39:05 PM | Posted IP 172.6*****

மாநகராட்சி அதிகாரிகளின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது........ ஏழைகளை வாழவிடுங்கள்.

நவமணி தங்கராஜ்.Jan 12, 2019 - 04:02:47 PM | Posted IP 162.1*****

மக்களை நசுக்குவதே அரசின் வேலையாகிவிட்டது. கோடி கணக்கில் வரி ஏய்ப்பு செய்தவன் கடன் வாங்கினவன் எல்லாரையும் விட்டு விட்டு பாமர ஏழை விவசாயிகள் சிறு வியாபாரிகளை நசுக்குவதே அரசின் வேலையாகிவிட்டது. வாழ்க ஜன நாயகம்.

ராஜாJan 12, 2019 - 12:57:52 PM | Posted IP 141.1*****

விவசாயிகளிடம் கறார் காட்டும் அதிகாரிகள் ரோட்டுல கடையை கட்டி வச்சிருக்கிற வன் ட மாதம்மாதம் வசூல் செஞ்சு புழைப்பு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes

Nalam Pasumaiyagam

CSC Computer Education


Thoothukudi Business Directory