» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குளத்தில் குளித்த வியாபாரி நீரில் மூழ்கி பரிதாப சாவு

சனி 12, ஜனவரி 2019 8:09:49 AM (IST)

ஆறுமுகனேரியில் வியாபாரி ஒருவர், குளத்தில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி ராஜமன்னியபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (50). இவர் ஆடு, மாடுகள் வாங்கி விற்பனை செய்து வந்தார்.  நேற்று மாலையில் ஆறுமுகனேரி பண்டாரக்குளத்தில் நண்பர்களுடன் குளித்தாராம்.  அப்போது குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் தத்தளித்துள்ளார். இதையடுத்து மீட்கப்பட்ட இசக்கிமுத்துவை, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.   இதுகுறித்து ஆறுமுகனேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


New Shape Tailors

Joseph Marketing

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory