» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும் தேதி : தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு

வெள்ளி 11, ஜனவரி 2019 7:41:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.01.2019 அன்று நடைபெறவுள்ளது என  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி  தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, உழவர் பெருமக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த இனிய பொங்கல் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஜனவரி 2019ம் மாதம் மூன்றாம் வியாழக்கிழமை (17.01.2019) அன்று அரசு விடுமுறை நாள் என்பதால், ஜனவரி 2019 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்நான்காவது வியாழக்கிழமை 24.01.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும். தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors


Joseph Marketing

crescentopticals

CSC Computer Education



Thoothukudi Business Directory