» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வஉசி கல்லூரியில் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

வெள்ளி 11, ஜனவரி 2019 6:47:48 PM (IST)




தூத்துக்குடி வஉசி கல்லூரியில் இன்று மாணவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.  

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் இன்று இன்றைய கல்விச்சூழல் மாணவர்களின் மனச்சோர்விற்கு காரணமாகிறது/ மருந்தாகிறது என்ற தலைப்பில் மாணவர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதனை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் தொகுத்து நெறிப்படுத்தி வழங்கினார்.   இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர் ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம் மற்றும் ஏ.பி.சி.வீ.சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  அதன் தொடர்ச்சியாக மாணவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.  

கலந்துரையாடலில் வ.உ.சி.கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் வ.உ.சி.கல்லூரி மாணவர்கள், ஏ.பி.சி.மகாலட்சுமி கல்லூரி மாணவர்கள், மற்றும் வ.உ.சி கல்வியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். துவக்க விழா நிகழ்ச்சியில் வ.உ.சி.கல்லூரி முதல்வர்.வீரபாகு வரவேற்புரை நிகழ்த்தி அனைவரையும் வரவேற்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Anbu Communications


Black Forest Cakes

CSC Computer Education






Thoothukudi Business Directory