» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக 110 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது : அருணா ஜெகதீசன்

வெள்ளி 11, ஜனவரி 2019 4:13:44 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 110 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் கூறினார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் நடந்த போராட்டதின்போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.  இதையடுத்து துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஆணையத்தை கடந்த ஆண்டு மே 23 ஆம் தேதி அரசு நியமித்து உத்தரவிட்டது. 

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 110 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் கூறியுள்ளார். மேலும் அவர், இதுவரை 209 ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாக அவர் தகவல் அளித்துள்ளார். மேலும் குண்டு காயமடைந்தோருக்கு சிகிச்சையளித்து நிவாரணம் வழங்க ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அடுத்த கட்ட விசாரணை வரும் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ஜெரால்டுJan 11, 2019 - 05:04:22 PM | Posted IP 162.1*****

மக்களுக்கு நீதி கிடைக்குறதுக்குள்ள பேக்டரி ஓபன் பண்ணிருவான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Anbu Communications

Black Forest Cakes

CSC Computer Education

Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory