» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய்மை பாரத இயக்கம் தொடர்பாக சுவரொட்டிகள் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி, வெளியிட்டார்.

வெள்ளி 11, ஜனவரி 2019 3:23:31 PM (IST)தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தூய்மை பாரத இயக்கம் தொடர்பாக ‘வாருங்கள் வரையலாம்" என்ற தலைப்பில் கழிவறை சுவர்களில் சித்திரம் வரைய -சுவரொட்டிகள் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கலந்துகொண்டு ‘வாருங்கள் வரையலாம்" என்ற தலைப்பில் கழிவறை சுவர்களில் சித்திரம் வரைய -சுவரொட்டிகளை வெளியிட்டார். பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது: தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் பொது மக்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், தங்கள் வீடுகளில் உள்ள கழிவறையை வண்ணங்கள் தீட்டி அழகுபடுத்துவதற்காகவும் Swachh Sundar Shauchalaya என்ற போட்டி 2019, ஜனவரி 01 முதல் 31 வரை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ‘வாருங்கள் வரையலாம் - SSS" என்ற தலைப்பில் - ஊரகப் பகுதிகளில் உள்ள தனிநபர் இல்லக் கழிவறைகளில் தூய்மை பாரத இயக்கம் குறித்த வாசகங்கள், படங்கள் மற்றம் லோகோ போன்றவற்றினை வரைந்து வண்ணம் தீட்டும் போட்டி நடத்தப்படவுள்ளது. ‘வாருங்கள் வரையலாம் - SSS "(Swachh Sundar Shauchalaya) போட்டிகள் 01.01.2019 முதல் 31.01.2019 முடிய நடைபெறும். ஊரகப் பகுதிகளில் உள்ள தனிநபர் இல்லக் கழிவறைகளில் மட்டுமே ஓவியங்கள் வரைந்திட வேண்டும். போட்டிகள், கிராம ஊராட்சிகள்/ ஊராட்சி ஒன்றியம்/ மாவட்டம்/ மாநில அளவில் நடைபெறும்.ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் தனிநபர் இல்லக்கழிவறைகளில் தூய்மை பாரத இயக்கம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள், லோகோ மற்றும் படங்கள் ஆகியவற்றினை கொண்டு வண்ணம் பூசி அழகுப்படுத்திட வேண்டும். 

ஊக்குவிப்பாளர்கள் தங்கள் வீடுகளில் உள்ள கழிவறையில் முதலில் வண்ணம் பூசி மற்றவர்களை ஊக்கப்படுத்திட வேண்டும். இப்போட்டியில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம். மகளிர் சுய உதவிக்குழுவினர் பெருமளவில் பங்கேற்பு செய்திடல் வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ/மாணவியர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு செய்யலாம்.ஓவியம் வரையும்போது எடுத்த புகைப்படத்துடன் போட்டியாளர் தமது பெயர், முகவரி, கைபேசி எண். மற்றும் தனிநபர் இல்ல கழிவறை பயனாளியின் பெயர் மற்றும் வரையப்பட்டுள்ள இடம் (அ) ஊராட்சியின் பெயர் ஆகிய விபரங்களுடன் தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலத்திற்கு- [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, கைப்பேசி எண்: 9443506031, 9443087072 என்ற எண்ணிற்கு Whatsapp மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் சிறந்த மூன்று வண்ணம் தீட்டப்பட்ட கழிவறைகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000/- , இரண்டாம் பரிசாக ரூ. 5000/-, மூன்றாம் பரிசாக ரூ.3000/- வழங்கப்படும். 

பள்ளிகள், கல்லூரிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், சுகாதார ஊக்குநர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியோர்களுக்கு, அதிக அளவு எண்ணிக்கையில் தனிநபர் இல்லக்கழிவறைகளில் வண்ணம் தீட்டுதல் மற்றும் அழகுப்படுத்துதல் போன்றவற்றினை மேற்கொண்டவர்களுக்கு ஜனவரி 26- குடியரசு தின விழாவின் போது ஊராட்சி/ஊராட்சி ஒன்றியம்/ மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு கேடயம் மற்றும் விருதுகள் வழங்கப்படும். என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ச.சா.தனபதி, முதன்மை கல்வி அலுவலர் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், கோட்டாட்சியர்கள் விஜயா, கோவிந்தராசு, வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Anbu Communications


CSC Computer Education

Black Forest Cakes

Thoothukudi Business Directory