» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை : மாவட்டஆட்சியர் அறிவிப்பு

வெள்ளி 11, ஜனவரி 2019 1:34:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி மாதம் 3 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடை மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் மூடப்பட்டிருக்கும் என மாவட்டஆட்சியர் சந்திப்நந்தூரி தெரிவித்தார். 

16.01.2019 திருவள்ளுவர் தினம், 21.01.2019 வள்ளலார் நினைவு தினம் மற்றும் 26.01.2019 குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு அரசு மதுபானக்கடைகள் அதனுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் (எப்எல் 1, எப்எல் 2,எப்எல் 3, எப்எல் 4 ,எப்எல் 3 ஏஏ) அனைத்தும் மேற்படி தினங்களில் மூடப்பட வேண்டுமென அரசு ஆணையிட்டுள்ளது. 

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள்(எப்எல் 1, எப்எல் 2,எப்எல் 3, எப்எல் 4 ,எப்எல் 3 ஏஏ) ஆகியவைகள் 16.01.2019, 21.01.2019 மற்றும் 26.01.2019 ஆகிய 3 நாட்களில் மட்டும் மூடப்பட்டிருக்கும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Nalam PasumaiyagamBlack Forest Cakes


CSC Computer Education
Thoothukudi Business Directory