» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வீடுபுகுந்து நகை திருடியவர் கைது

வெள்ளி 11, ஜனவரி 2019 7:58:56 AM (IST)

தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சின்னமணிநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். மகன் ராஜ்குமார் (27). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2-ந்தேதி காலையில் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு இரவு அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டிற்குள் சென்றபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 2¾ பவுன் சங்கிலி திருடப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து ராஜ்குமார் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். அவரது பக்கத்து வீட்டில் குடியிருந்த செந்தூர்பாண்டி(27) என்பவர் சில நாட்களில் வீட்டை காலி செய்து கொண்டு திரு.வி.க. நகரில் குடியேறி இருந்தார். சந்தேகத்தின் பேரில், போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் வீட்டின் பின்பக்கத்தில் பூட்டை உடைத்து உள்ளே சென்று, கள்ளச்சாவி போட்டு பீரோவை திறந்து சங்கிலியை திருடி சென்றதை ஒப்பு கொண்டார். இதனையடுத்து செந்தூர்பாண்டியை போலீசார் கைதுசெய்தனர். அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.


மக்கள் கருத்து

நிஹாJan 11, 2019 - 10:14:08 AM | Posted IP 141.1*****

களவு போன நகைகளின் மதிப்பை குறைத்து வழக்கு பதிவது இன்னும் தொடர்கிறதா? 50 பவுன் காணாமல் போனால் 5 பவுனுக்குத்தான் வழக்கு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing

New Shape Tailors

CSC Computer Education

crescentopticalsThoothukudi Business Directory