» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எலக்ட்ரானிக் கடையில் மின்சாரம் தாக்கி இளம்பெண் சாவு

வெள்ளி 11, ஜனவரி 2019 7:53:43 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே எலக்ட்ரானிக் கடையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல் டவுன் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மனைவி பானுமதி. இவர்களுக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் கண்மணி (21). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் உள்ள தனது சித்தி ரம்யா வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் அங்கு தங்கியிருந்து, அதே பகுதியில் உள்ள ஒரு எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை கடையில் வேலை பார்த்து வந்தார். தினமும் இரவு கடைகளில் உள்ள மின் விளக்குகளை அவர் அணைத்துவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கமாம்.

நேற்று முன்தினம் இரவு கடைகளில் உள்ள மின் விளக்குகளை அவர் அணைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


மக்கள் கருத்து

vaideeswaranJan 11, 2019 - 09:11:56 AM | Posted IP 141.1*****

I think the delay in admitting her in a hospital should be the cause for her death.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


New Shape Tailors

CSC Computer Education

Joseph Marketing

Anbu Communications

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory