» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி அருகே இளைஞருக்கு அரிவாள்வெட்டு : போலீஸ் விசாரணை

வியாழன் 10, ஜனவரி 2019 12:36:08 PM (IST)

கோவில்பட்டி அருகே மனைவியிடம் நகை பறிக்க முயன்றதை தடுக்க முற்பட்ட அவரது கணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி கிராமம் தெற்குதெருவை சேர்ந்தவர் ரமேஷ் (25). இவரது மனைவி முத்துலட்சுமி (24). இவர்கள் இருவரும் பைக்கில் கோவில்பட்டி சென்று விட்டு மறுபடியும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். பருவக்குடி ரோடு முக்கூட்டுமலை பகுதியில் வரும் போது 2 பேர் கையில் அரிவாளுடன் திடீரென அவர்களை வழிமறித்து முத்துலட்சுமி கழுத்திலிருந்த சுமார் 5 பவுன் தாலி செயினை பறித்தார்களாம். 

இதை ரமேஷ் தடுக்க முற்படவே அவரை அரிவாளால் வெட்டினார்கள். பின்னர் அவர்கள் நகையுடன் தப்பியோடினார்கள். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து

நிஹாJan 11, 2019 - 10:18:56 AM | Posted IP 141.1*****

சிறுபிள்ளைத்தனமான கருத்து.

அருண்Jan 10, 2019 - 11:16:01 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி மாவட்டம் திருட்டிற்கு பேர் பெற்ற ஊர்... அஜித் பேன்கள் அதிகம் கூட...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Anbu CommunicationsJoseph Marketing

New Shape Tailors

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Thoothukudi Business Directory