» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 நிறுத்தம்? டோக்கன் வழங்கப்படுவதால் மக்கள் குழப்பம்

புதன் 9, ஜனவரி 2019 3:55:52 PM (IST)

தூத்துக்குடியில் பல்வேறு ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை ரூ.1,000 வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பொங்கல் பண்டிகையை ஒட்டி, அனைத்து குடும்ப அட்டைதாரர்கள், முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் என மொத்தம் 2 கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்து 54 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.258 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் பழனிசாமி அறிவித்த நிலையில், ஜனவரி 7ம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர், தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜமாணிக்கம், சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவால் பல ரேசன் கடைகளில் ரூ.1000 வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு, ரேசன் கார்டு தாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு மட்டுமே பரிசுத் தொகை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி, வெள்ளை நிற ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கும், முன்னுரிமைப் பெறாத (என்பிஎச்எச்) மற்றும் சர்க்கரை மட்டுமே வாங்கும்  (என்பிஎச்எச்எஸ்) அட்டைகளுக்கும் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படாது. அரிசி வாங்கும் ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அறிவிப்பால் தற்போதைக்கு, பல ரேஷன் கடைகளில் ரொக்கப் பணம் கொடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தூத்துக்குடியில் பல கடைகளில் அனைத்து கார்டுகளுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவு தொடர்பாக தங்களுக்கு மேலிடத்தில் இருந்து எந்த தகவலும் வரவில்லை என ரேசன்கடை ஊழியர்கள் கூறுகிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Black Forest Cakes

CSC Computer EducationAnbu CommunicationsThoothukudi Business Directory