» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க காேரி ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

புதன் 9, ஜனவரி 2019 2:27:45 PM (IST)ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க காேரி சென்னையில் 500க்கும் மேற்பட்ட ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் கூடி முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்..

தூத்துக்குடியில் கடந்த மே 22 ம் தேதி நடைபெற்ற கலவரத்தில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இதனால் ஆலையை மூட தமிழகஅரசு உத்தரவிட்டது. பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்ற வழக்கிற்கு பிறகு ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட மாட்டாது என தமிழகஅரசு தெரிவித்தது. 

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு உடனடியாக தமிழக அரசு உத்தரவிடக்கோரி  சேப்பாக்கத்தில் 500க்கும் மேற்பட்ட ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் கூடி முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். ஆலையை திறக்ககோரி 1.68லட்சம் மனுக்களை இன்று முதல்வரிடம் அளிக்கவுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து

vaideeswaranJan 11, 2019 - 09:09:27 AM | Posted IP 141.1*****

They are the right persons and their views should be respected.

கந்தன்Jan 10, 2019 - 12:21:02 PM | Posted IP 162.1*****

காசு குடுத்த உண்மை மாதிரி ஆளுங்க பீ திம்பாங்க போல. ஹி ஹி ஹி

மக்கா!Jan 10, 2019 - 04:10:14 AM | Posted IP 108.1*****

சட்டப் போராட்டம் மூலம் தங்கள் தரப்பு நியாயத்தை தெளிவுபடுத்த உள்ள ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்! மக்கள் என்றும் நீதி மற்றும் நியாயத்தின் பக்கமே!!

indianJan 9, 2019 - 07:34:09 PM | Posted IP 108.1*****

ஸ்டெர்லிட் வேண்டும் அரசு கவனமுடன் பரிசிலிக்க வேண்டும்

உண்மைJan 9, 2019 - 05:57:48 PM | Posted IP 108.1*****

கந்தன் மாதிரி அறிவாளிங்க இருக்குற வரைக்கும் தூத்துக்குடி முன்னேறாது.

கந்தன்Mar 18, 1547 - 03:30:00 PM | Posted IP 141.1*****

500 பேர் போயி எப்படி 1 . 68 லட்சம் மனுக்களை குடுக்க முடியும்?

கணேஷ்Jan 9, 2019 - 02:38:19 PM | Posted IP 141.1*****

போரட்டம் வெல்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest CakesAnbu Communications


CSC Computer EducationThoothukudi Business Directory