» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை : எஸ்பி முரளி ரம்பா எச்சரிக்கை

ஞாயிறு 30, டிசம்பர் 2018 9:07:32 PM (IST)

புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீதும்,  குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி முரளி ரம்பா எச்சரித்துள்ளார்

புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட பொது மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  மேலும் விபத்தில்லா புத்தாண்டை கொண்டாடுமாறு அறிவுறுத்தியுள்ளார். வருகிற புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றில் பந்தயம் வைத்து  வாகனம் ஓட்டுபவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் அமர்ந்து செல்பவர்கள், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை மோட்டார் வாகனம் ஓட்ட அனுமதிப்பவர்கள், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர மோட்டார் வாகனத்தில் செல்பவர்கள் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்,  பொது இடங்களில் மது அருந்துதல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி முரளி ரம்பா எச்சரித்துள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




CSC Computer Education


Black Forest Cakes

Anbu Communications

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory