» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் : புத்தாண்டில் மாநகராட்சி புது முயற்சி

ஞாயிறு 30, டிசம்பர் 2018 8:43:51 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு மண்டலப் பகுதிகளில் பரீட்சார்த்த முறையில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் 3 நாட்களுக்கு ஒரு முறை என்ற சுழற்சி முறையில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேற்படி குடிநீர் விநியோகமானது பொது மக்கள் பயன் பெறும் வகையில் தினசரி குடிநீர் விநியோகம் செய்திடவும், குடிநீர் விநியோக செயல்பாடுகளை கண்காணித்திட அனுபவம் வாய்ந்ததும், தமிழக அரசு சார்ந்த நிறுவனமுமான ஆ/ள.தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் முதல் மாநகர பகுதிகளின் குடிநீர் விநியோக முறைகளை ஸ்தல ஆய்வு செய்து பல்வேறு வகையான பரிசோதனைகளை மேற்கொண்டதன் விளைவாக முதற்கட்டமாக வடக்கு மற்றும் தெற்கு மண்டலப் பகுதிகளில் பரீட்சார்த்த முறையில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்திட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி கீழ்காணும் குடிநீர் விநியோக 20 மண்டலங்களில் அமைந்துள்ள 28 வார்டுகளில் முழுமையாக மற்றும் பகுதி பகுதியாக குடிநீர் விநியோகம் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. குடிநீர் விநியோக மண்டல பெயர் - கொள்ளளவு - வார்டு பகுதிகள்

வடக்கு மண்டலம் 

02-பாரதி நகர் - 8லட்சம் லிட்டர் - 3 (பகுதி ) மற்றும் 34
03- மீளவிட்டான் - 3 லட்சம் லிட்டர் - 3 (பகுதி)
04- பண்டாரம்பட்டி - 2 லட்சம் லிட்டர் - 1 (பகுதி) மற்றும் 5 (பகுதி)
05- சங்கரபேரி - 2 லட்சம் லிட்டர் - 1 (பகுதி)
06- ஆர்.எஸ்.பி.ஆர் நகர் - 6 லட்சம் லிட்டர் - 5 (பகுதி)
07- ஆதிபராசக்தி நகர் - 6 லட்சம் லிட்டர் - 1 (பகுதி), 2 மற்றும் 5 (பகுதி)
08- வி.எம்.எஸ் நகர் - 1 லட்சம் லிட்டர் - 3 (பகுதி)
09 – எட்டையாபுரம் - 15 லட்சம் லிட்டர் - 4,7,8(பகுதி) மற்றும் 5 (பகுதி)
10 – சுப்பையாபார்க் - 20 லட்சம் லிட்டர் - 6,9,10,11(பகுதி) மற்றும் 19
11 – தூத்துக்குடி ரூரல் - 9 லட்சம் லிட்டர் - 17 மற்றும் 18

தெற்கு மண்டலம் - 
 - 
20 – பிரையண்ட் நகர் - 9 லட்சம் லிட்டர் - 42 (பகுதி), 43 (பகுதி), மற்றும் 47 (பகுதி)
22 – என்.ஜி.ஓ காலனி - 7 லட்சம் லிட்டர் - 42 (பகுதி)
23 – இந்திரா நகர் (under construction) - 6 லட்சம் லிட்டர் - 48
24 – முடுக்கு காடு - 4 லட்சம் லிட்டர் - 50
25 – முத்து நகர் - 4 லட்சம் லிட்டர் - 51 (பகுதி), மற்றும் 53 (பகுதி)
26- வீரநாயக்கன்தட்டு - 4 லட்சம் லிட்டர் - 51 (பகுதி), மற்றும் 52 (பகுதி)
27 – முத்iயாபுரம் - 10 லட்சம் லிட்டர் - 51 (பகுதி), 54 (பகுதி), மற்றும் 60 (பகுதி)
28- வேலாயுதம் நகர் - 9 லட்சம் லிட்டர் - 52 (பகுதி), 53 (பகுதி), மற்றும் 60 (பகுதி)
29- அத்திமரப்பட்டி - 10 லட்சம் லிட்டர் - 55 (பகுதி),57 (பகுதி),58 (பகுதி) மற்றும் 59
30-பொன்னகரம் - 10 லட்சம் லிட்டர் - 55 (பகுதி), 56,57(பகுதி), மற்றும் 58 (பகுதி)

எனவே வருகின்ற 01.01.2019 புத்தாண்டு முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மேற்படி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதுடன் படிப்படியாக மாநகரின் அனைத்து பகுதிகளிலும் விரிவுப்படுத்துவதோடு தினசரி குடிநீர் விநியோகம் என்ற இலக்கினையும் விரைவில் அடைவோம் என பொதுமக்களுக்கு புத்தாண்டு செய்தியாக மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்தார்.
 
"குறைந்த விலையில் குடிநீர்” மாநகராட்சிதிட்டம்

தமிழக சட்டமன்றத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கான மான்யக்கோரிக்கை விவாதத்தின்போது பொதுமக்கள் நலன் கருதி மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் அவர்களால் மாநிலமெங்கும் மிகக்குறைந்த விலையில் குடிநீர் வழங்கிட ஏதுவாக தானியங்கி குடிநீர் மையங்கள் அமைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கீழ்காணும் 20 இடங்களில் தானியங்கும் குடிநீர் மையங்கள் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. வார்டு எண் மற்றும் பகுதிகள் வருமாறு :  
 
மேற்கு மண்டலம் 

34 மடத்தூர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
36 மில்லர்புரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
38 எஸ்.என்.பார்க் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
41 ராஜாஜி பார்க் (அம்மா உணவகம் அருகில்)
46 லெவிஞ்சிபுரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
 
கிழக்கு மண்டலம்

26 பேபி ஹோம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
15 ஜீவிடி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
33 ஜார்ஜ் ரோடு அம்மா உணவகம்
26 ஜி.எல்.ஆர் ரெயில்வே ஸ்டேஷன் சாலை
16 குரூஸ்புரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
 
வடக்கு மண்டலம்

05 முத்தம்மாள் காலனி (சமுதாயகூடம்)
02 தனசேகர நகர் பார்க்
18 கலைஞர் நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி (ரோசம்மாள் பள்ளி பின்புறம்)
12 கருப்பட்டி சோசைட்டி கார்னர்
11 சுப்பையா பார்க் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
 
தெற்கு மண்டலம்

50 முடுக்கு காடு (பள்ளி அருகில்)
51 வீரநாயக்கன்தட்டு (பள்ளி அருகில்)
52 முத்தையாபுரம் பஞ்சாயத்து அலுவலகம்
53 அத்திமரப்பட்டி அங்கன்வாடி மையம்
58 முள்ளக்காடு நூலகம் (பேருந்து நிறுத்தமிடம்)

மேற்காணும் இடங்களில் குறைந்தவிலையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோம் செய்திட விருப்ப கேட்பு (EOI) கோரப்பட்டதில் M/s.Dharana Infrastructure Project Pvt Ltd என்னும் நிறுவனமானது மேற்காணும் இடங்களில் தனது சொந்த பொறுப்பில் தானியங்கும் குடிநீர் மையங்களை ஏற்படுத்தி 20 லிட்டர் குடிநீரினை ரூ.6.90 என்ற விலை விகிதத்தில் விற்பனை செய்திட தனது விருப்பத்தினை தெரிவித்துள்ளதோடு மேற்படி தொகையில் ரூ.1.00 மாநகராட்சிக்கு செலுத்திடவும் இசைவு தெரிவித்துள்ளது, 

மாநகர பொதுமக்கள் மட்டுமல்லாது மாநகருக்கு வருகை தரும் பிற பகுதியைச் சார்ந்தோர் மற்றும் குடிநீர் கிடைக்கப்பெறாத பகுதியில் வசிப்போர் போன்றோருக்கு குறைந்த விலையில் குடிநீர் வழங்கப்படும் இத்திட்டமானது மிகுந்த பலனளிப்பதுடன் இத்திட்டத்தின் வாயிலாக மாநகராட்சிக்கு கிடைக்கப்பெறும் பகிர்வுநிதியினைக் கொண்டு மக்களுக்கு மேலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஏதுவாகும். மேற்படி திட்டமானது விரைவில் செயல்படுத்தப்பட்டு பொதுமக்களின் நன்மதிப்பினைப் பெறும் என மாநகராட்சி ஆணையர் (ம) தனிஅலுவலர் டாக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெவித்தார்


மக்கள் கருத்து

கணேஷ்Jan 2, 2019 - 03:10:52 PM | Posted IP 141.1*****

வெயில் நேரம் , தண்ணீர் சப்லை ஒரு நாள் விட்டு , ஒரு நாள் கொடுங்க திரு. ஆணையர் அவர்களே ,

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


CSC Computer Education

Anbu Communications

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory