» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சில்லறை விற்பனை பெட்ரோல் பம்ப் உரிமம் பெற 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

செவ்வாய் 18, டிசம்பர் 2018 5:23:34 PM (IST)

சில்லறை விற்பனை பெட்ரோல் பம்ப் உரிமம் பெற தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த விருப்பமுள்ள முன்னாள் படைவீராகள் வருகிற 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :  தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அறிவது, பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலமாக Open CC1 Category’’-க்கான பெட்ரோல் விநியோக அங்காடி நடத்திட விண்ணப்பங்கள் மற்றும் விவரங்கள் www.petrolpumpdealerchayan.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீராகள் Defence Category--யினரும் (CC1 Category)-ஆக விண்ணப்பித்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விருப்பமுள்ளவர்கள் நேரடியாக இணையதளம் மூலம் விண்ணப்பத்திட கடைசி நாள் 24.12.2018. தூத்துக்குடி மாவட்டத்தில் கீழ்காணும் மூன்று இடங்களுக்காக சில்லறை விற்பனை நிலையம் ஏற்று நடத்திட விண்ணப்பிக்கலாம்.

1. கயத்தார், கடம்பூர் ரோடு (Kayathar on Kadambur Road)

2. மணப்பாடு SH 176 (Manapad on SH 176)

3. தூத்துக்குடி PC ரோடு விவிடி சிக்னல் ஓல்டு போர்ட் (Tuticorin PC Road VVD Signal to old port)

ஆகிய இடங்களில் அமைக்க இருக்கும் சில்லறை விற்பனை மையத்திற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த விருப்பமுள்ள முன்னாள் படைவீராகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துக்கொள்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications
Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer EducationThoothukudi Business Directory