» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாநில கூட்டுறவு சங்கங்களில் முன்னெச்சரிக்கையுடன் முதலீடு செய்யு்ங்கள் : பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

செவ்வாய் 18, டிசம்பர் 2018 4:14:40 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பல் மாநில கூட்டுறவு சங்கங்கள் தமிழ்நாடு கூட்டுறவு சங்க பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனம் இல்லை  என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூட்டுறவு சங்க இனை பதிவாளர் அருளரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:  பல் மாநில கூட்டுறவு சங்கங்கள் (Multi State Cooperative Societies) மத்தியவேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகப் பதிவாளர் கட்டுப்பாட்டிலோ, தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டிலோ செயல்படும் நிறுவனம் அல்ல. இதுதன்னிச்சையாக செயல்படும் நிறுவனம் ஆகும்.

ஆகவே இந்நிறுவனம் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகப் பதிவாளர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்கட்டுப்பாட்டின் கீழ்செயல்படும் நிறுவனம் அல்ல. மேலும் இந்நிறுவனங்களிலுள்ள வைப்புதாரர்கள் மற்றும் உறுப்பினர்கள், தங்களால் இந்நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் வைப்புகளுக்கு எவ்வகையிலும் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகப் பதிவாளரிடமோ, தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரிடமோ எந்தவித உத்திரவாதத்தையும் கோர இயலாது.

எனவே பொதுமக்கள் பல மாநில கூட்டுறவுசங்கங்களில் தத்தமது சுய பொறுப்புறுதியிலும், அந்நிறுவன சாதக பாதகங்களை ஆராய்ந்து முன்னெச்சரிக்கையுடனும் முதலீடுகள் மற்றும் வைப்புகள் மேற்கொள்ளகேட்டுக் கொள்ளப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இனை பதிவாளர் அருளரசு தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

New Shape Tailors

CSC Computer Education


Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory