» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கால்நடை மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை: ஆவின் தலைவர் என். சின்னத்துரை வழங்கினார்.

வியாழன் 6, டிசம்பர் 2018 3:49:48 PM (IST)கால்நடை மருத்துவம் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு திட்டத்தின் கீழ் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கால்நடை மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை ஆவின் தலைவர் என். சின்னத்துரை வழங்கினார்.

திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் நலன் கருதி கால்நடை மருத்துவப் பணிகளை ஆவின் தலைவர் என். சின்னத்துரை சென்ற மாதம் ஆய்வு செய்து கால்நடை மருத்துவப்பணிகள் முழு வீச்சில் நடைபெற அறிவுறுத்தினார். அதன் தொடர்ச்சியாக தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் 2018-19-ன் உள் திட்டமான தொழுவத்திலேயே கால்நடை மருத்துவம் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு திட்டத்தின் கீழ் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கால்நடை மருத்துவர்களுக்கு இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

மேற்கண்ட கால்நடை மருத்துவர்கள் திருநெல்வேலி, வள்ளியூர், நான்குனேரி, ஆலங்குளம், சங்கரன்கோவில், சாத்தான்குளம், சொக்காரக்குடி, கயத்தார் மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வொன்றிய கட்டுப்பாட்டில் உள்ள 342 பால் கூட்டுறவு சங்கங்களுக்கும் கால்நடை மருத்துவப் பணிகள் தொய்வின்றி நடைபெற போதுமான மருத்துகள் மற்றும் மருத்துவ உபகாரணங்கள் வழங்கி இப்பணிகள் சிறப்பாக நடைபெற தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணி நியமனம் செய்யப்பட்டுள்ள கால்நடை மருத்துவர்கள் மூலம் பால் உற்பத்தியாளர்களின் இல்லங்களுக்குச் சென்று கால்நடை மருத்துவ சிகிச்சைகள், செயற்கை முறை கருவூட்டல் பணிகள் மற்றும் அவசர சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்படும். 

மேலும் கால்நடை வளர்ப்பு மேலாண்மை பயிற்சி, தூய பால் உற்பத்தி பயிற்சி, சமச்சீர் தீவனத்திட்டம் மற்றும் பல்வேறு தீவனப்பயிர்களான அசோலா, மண்ணில்லா பசுந்தீவனம் வளர்ப்பு முறைகள், கால்நடை வளர்ப்பில் தாதுஉப்பின் முக்கியத்துவம், கலப்புத்தீவனம் வழங்கும் முறைகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகளை இம் மருத்துவர்கள் வழங்குவார்கள். மேலும் சங்கப்பணியாளர்களுக்கு செயற்கை முறை கருவூட்டல் பயிற்சி வழங்கி சரியான நேரத்தில் செயற்கை முறை கரூவூட்டல் செய்யவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இவ்வொன்றிய பால் உற்பத்தி 72,000 லிட்டரிலிருந்து ஒரு இலட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆவின் தலைவர் என். சின்னத்துரை தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Anbu Communications


New Shape Tailors

Black Forest CakesJoseph Marketing

CSC Computer EducationThoothukudi Business Directory