» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விமானநிலையத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது : தூத்துக்குடியில் பரபரப்பு

வியாழன் 6, டிசம்பர் 2018 1:11:16 PM (IST)
தூத்துக்குடியில் விமானநிலையம் முற்றுகை போராட்டம் நடத்த சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

பாபர்மசூதி வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பு வழங்ககோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தூத்துக்குடி கலைஞர் அரங்கம் அருகில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி துணை பொது செயலாளர் மண்டலம் ஜெயினுலாப்தின் தலைமை தாங்கினார். மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஜாகிர்உசேன், மாவட்ட பொருளாளர் நவாஸ், மாவட்ட துணை செயலாளர் காதர்பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு அழைப்பாள்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அகமதுஇக்பால், தமிழக வாழ்வுரிமை கட்சி கிதர்பிஸ்மி, இந்திய தேசியலீக் சேக்மைதீன் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோசமிடப்பட்டது. பின்னர் அங்கிருந்து விமானநிலையம் முற்றுகை போராட்டம் நடத்த சென்றவர்களை தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் மறித்து காவல்துறையினர் 100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer EducationNalam Pasumaiyagam

Anbu CommunicationsNew Shape Tailors

Joseph Marketing

Black Forest CakesThoothukudi Business Directory