» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மது பழக்கத்ததால் விபரீதம்: வியாபாரி உட்பட 2பேர் தற்கொலை
வியாழன் 6, டிசம்பர் 2018 11:46:10 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மது பழக்கத்துக்கு அடிமையான 2பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தூத்துக்குடி, பிரையண்ட் நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் முத்துமாடசாமி (37). கருவாடு வியாபாரம் செய்து வந்தார். சம்பாதிக்கும் பணம் முழுவதையும் மது குடித்து செலவழித்து வந்துள்ளார். இதனை அவரது தந்தை கண்டித்து வந்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமம் உச்சினி மாகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்லையா மகன் சேர்மதுரை (63). விவசாயியான இவர் அடிக்கடி மது குடித்து வந்துள்ளார். இதனை அவரது மகன் கண்டித்தாராம். இதனால் மன வேதனையடைந்த அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து சாயர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி தற்கொலை
புதன் 20, பிப்ரவரி 2019 7:44:09 PM (IST)

சண்முகநாதன் எம்எல்ஏ.,வுடன் ஸ்டெர்லைட்எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் சந்திப்பு
புதன் 20, பிப்ரவரி 2019 7:21:33 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
புதன் 20, பிப்ரவரி 2019 6:45:22 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 22ம் தேதி அம்மா திட்ட முகாம்
புதன் 20, பிப்ரவரி 2019 5:59:11 PM (IST)

சீர்மரபினர் சமுதாயத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்: ஆய்வுக் கூட்டத்தில் கோரி்க்கை
புதன் 20, பிப்ரவரி 2019 5:04:18 PM (IST)

தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவியை கடத்திய வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது
புதன் 20, பிப்ரவரி 2019 4:11:36 PM (IST)
