» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமண ஆசைகாட்டி கல்லூரி மாணவி பலாத்காரம்: காதலன் மீது புகார் - குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு

வியாழன் 6, டிசம்பர் 2018 11:34:35 AM (IST)

செய்துங்கநல்லூர் அருகே திருமண ஆசைகாட்டி இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் காதலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவதி (18), (பெயர் மாற்றம்) தனியார் கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன் பார்த்திபன் (24) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பார்த்திபன் அவரை பலமுறை பலாத்காரம் செய்தாராம். இதில் அவர் 4 மாத கர்ப்பினியானார். 

பின்னர், திருமணம் செய்ய பார்த்திபன் மறுத்துவிட்டாராம். இதையடுத்து பார்த்திபன் வீட்டிற்கு சென்று ரேவதி திருமணம் குறித்து பேசியபோது, அவரது குடும்பத்தினர் ரேவதியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். புகாரின் பார்த்திபன், அவரது தந்தை சண்முகவேல், தாயார் விஜயா, சகோதரர்கள் மாரியப்பன், விஜய், சகோதரி சித்திரை வடிவு ஆகிய 6பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், பார்த்திபன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals








Thoothukudi Business Directory