» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடிநீர் பிரச்சனையை சரி செய்ய புதிய திட்டம் தயார் : தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு

செவ்வாய் 4, டிசம்பர் 2018 6:41:14 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சனைகளை சரி செய்ய புதிய திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மூன்று தினங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகருக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரதான குடிநீர் குழாய்களில் ஏற்படும் நீர்கசிவு மற்றும் குடிநீர் குழாய் உடைப்பு போன்றவற்றால் உரிய அட்டவணை மற்றும் கால அளவுக்குள் குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது.

எனவே தூத்துக்குடி மாநகர மக்களின் நலன் கருதி குடிநீர் விநியோகம் சீராக நடைபெறவும் அனைத்து தினங்களிலும் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையிலும் மாநகரின் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு 100 சதவிதம் வழங்கப்பட்டுள்ளது என்பதனை உறுதி செய்யும் வகையிலும் குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்கள் அனைத்தும் உடனுக்குடன் களைய ஏதுவாக திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியானது டிடபிள்யூஐசி லிமிடெட் சென்னை என்னும் அரசு நிறுவனத்திடம் மூன்றாண்டுகளுக்கு பணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.மேற்படி நிறுவனமானது மத்திய,மாநில அரசுகளின் கூட்டு நிறுவனம் மட்டுமல்லாது குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளில் அனுபவம் வாய்ந்த நிறுவனமாகும்.

டிடபிள்யூஐசி நிறுவனமானது மாநகரப்பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களை பராமரித்தல், குடிநீர் இணைப்புகளுக்கான அளவுமானியை கண்காணித்தல், நீரேற்று நிலையம், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை இயக்கி பராமரிப்பு செய்தல், குடிநீர் விநியோகம் சீராக கிடைக்கப்பெறாத பகுதிகளை ஆய்வு செய்து குடிநீர் விநியோகம் சீராக கிடைக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை கண்காணித்து வருவதுடன் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை வரன்முறைப்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொண்டு மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் சிறப்பாக நடைபெறும் வகையில் மாநகராட்சி ஆணையரின் உத்தரவின்படி செயல்படும் எனவும் பொதுமக்கள் டிடபிள்யூஐசி நிறுவனத்தாருக்கு ஓத்துழைப்பு வழங்கிடுமாறு மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ஒருவன்Dec 7, 2018 - 10:54:49 AM | Posted IP 162.1*****

தண்ணீர் வேலையை விட கோடி கோடியா செலவழித்து பாதாள சாக்கடை தீயாக வேலைபார்ப்பங்களாம் .. கொசுக்களை பரப்புவாங்களாம்

ரவிDec 5, 2018 - 10:54:11 AM | Posted IP 162.1*****

இங்க தனி லைன் மட்டும் குடுத்து பாருங்க சார் அப்புறம் தெரியும்

மக்கள்Dec 5, 2018 - 10:53:08 AM | Posted IP 162.1*****

தண்ணீர் மற்ற இடங்களில் ரொம்ப ரொம்ப சாதாரண விஷயம் இங்க உள்ளவங்களுக்கு அறிதான விஷயம் கேட்டால் உங்க பகுதி பஞ்சாயத்து பகுதி அப்படினு சொல்லூவாங்க

ரவிDec 5, 2018 - 10:50:52 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் பகுதியில் உள்ள மாதாநகர் பாலதண்டாயுதநகர் பகுதிகளில் சீக்கிரம் தண்ணீர் இணைப்பு கொடுங்க இங்கயும் நிறைய மக்கள் இருக்காங்க தினமு‌ம் ஓரு குடம் தண்ணீர் ரூபாய் 7 குடுத்து வாங்குறாங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph MarketingNew Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals

Thoothukudi Business Directory