» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரியிடம் லஞ்சம் கேட்ட சுகாதாரத்துறை அதிகாரி கைது: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை!!

வெள்ளி 30, நவம்பர் 2018 10:20:17 AM (IST)

சாயர்புரம் போப் கல்லூரிக்கு சுகாதார சான்று வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட சுகாதாரத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்தில்  போப் பி.எட் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு சுகாதார சான்று கோரி கோரி சுகாதார துறையிடம் விண்ணம் செய்தனர். இது தொடர்பாக கல்லூரி உதவியாளர் ஜெயகுமார் (45), சாயர்புரம் பேரூராட்சி சுகதாரத்துறை அதிகாரி ஆழ்வாராப்பன் (53) என்பவரிடம் சுகாதாரச் சான்று வழங்கும் நடவடிக்கை எடுக்கும்படி விண்ணப்பம் அளித்தபோது, அவர் ரூ.25ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். குறித்து கல்லூரி நிர்வாகம் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருக்கிறது. 

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி தர்மராஜ் ஆலோசனையின் பேரில் இன்று காலை சாயர்புரத்தில் கல்லூரி முன்பு வைத்து பணத்தை தந்துவிடுவதாக கூறியிருக்கிறார்கள். அதை நம்பி வந்த அதிகாரி ஆழ்வாரப்பன், பணத்தை பெறும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் அண்ணாமலை தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் சிவகளையில் உள்ள அவரது வீட்டிலும், சாயர்புரம் பேரூராட்சி அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தினர். இதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆழ்வாரப்பனை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

M.sundaramDec 1, 2018 - 12:51:01 AM | Posted IP 172.6*****

What is the statistic of officials punished in such cases.?

வடிவிலேNov 30, 2018 - 12:22:51 PM | Posted IP 172.6*****

அப்புறம் டூட்டில சேர்ந்துடுவார்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamJoseph Marketing

Anbu Communications


CSC Computer Education

New Shape TailorsThoothukudi Business Directory