» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பாளை ரோட்டில் மேம்பாட்டு பணிகள்: மாநகராட்சி ஆணையர் தகவல்

புதன் 28, நவம்பர் 2018 5:26:34 PM (IST)

தூத்துக்குடி பாளை ரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையர் அல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாமும் பொதுமக்கள் பொழுதினை பயனுள்ளதாக களிக்கவும், ஆரோக்கியம் மற்றும் அறிவியல் சார்ந்த பல்வேறு பயனுள்ள காரியங்களை தெரிந்து கொள்ளும் விதமான அம்சங்களுடன் அமைத்திடும் வகையில் மாநகராட்சி பூங்காக்கள் அம்ரூத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது

தற்பொழுது பாளை ரோடு பகுதியில் தெரு விளக்குகள் எல்இடி விளக்குகள் மூலம் இரவில் ஜொலித்திடும் வகையில் வி.வி.டி சிக்னல் முதல் 3வது மைல் வரை சாலையின் நடுவில் 76 மின்கம்பங்களில் 152 தெருவிளக்குகள் (120W) ரூ75.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்குடம் பணிகள் நடைபெறவுள்ளது. மேலும் மாநகரப்பகுதியானது பசுமையாக காட்சியளிக்கும் வகையிலும் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து தூத்துக்குடிக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திடும் வகையில் பிரம்மாண்டமான பூங்கா பாளை ரோடு பகுதியில் வ.உசி கல்லூரி முதல் ஏ.பி.சி.வீ பள்ளி வரையிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.600.28 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

மேற்படி பூங்காவில் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பொதுமக்களை சிந்திக்கவும் வியப்பில் ஆழ்த்த கூடிய வகையிலும் அறிவியல் பூங்கா மற்றும் பரினாம வளர்ச்சி குறித்து அனதைது தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையிலான பரினாம வளர்ச்சி பூங்கா (Evolution Park) அமைக்கப்படவுள்ளது. இது தவிர்த்து கோளரங்கம் (Planetarium), மீன் அருங்காட்சியங்கள் (Aquarium), ஐவகை நிலங்களான முல்லை,மருதம்,நெய்தல்,பாலை ஆகியவற்றின் தத்ருப காட்சிகள், அலங்கார மின்விளக்குள்,நீருற்றுகள், புல்தரைகள், பல்வேறு வகையான மலர் செடிகள் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.மேலும் மேற்படி பூங்காவிற்கு எதிர்புறம் தற்போது எம்.ஜி.ஆர் பூங்கா இடத்தினை மேலும் அபிவிருத்தி செய்யம் விதமாக நடைபாதை, இருக்கை வசதிகள், வண்ண நிழற்குடைகள், திறவிட உடற்பயிற்சி உபகரணங்கள்(Open Gym), Amphitheatre புல்தரைகள், மலர் செடிகள், நவீன மயமான அலங்கார மின்விளக்குடன் கூடிய பூங்கா மேம்பாட்டு பணிகள் ரூ.300.05 இலட்சத்தில் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

பாளை ரோடு பகுதியில் மழைநீர் சிறிதும் தேங்காமல் உடனடியாக கடலில் சென்றடையும் வகையில் 3வது மைல் முதல் பழைய துறைமுகம் வரை ரூ.1800.53 இலட்சம் மதிப்பீட்டில் நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுவதற்கான பணியானது விரைவில் துவங்கப்படவுள்ளது மேற்காணும் பணிகள் அனைத்தும் ஸ்மாட்சிட்டி திட்டத்தின் கீழ் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால் தூத்துக்குடி மாநகரின் பிரதான சாலையான பாளை ரோடு புதுப்பொலிவுடன் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைக்கப்படவுள்ளது என மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

rajtutDec 3, 2018 - 03:06:07 PM | Posted IP 162.1*****

ஐவகை நிலங்களான முல்லை,மருதம்,நெய்தல்,பாலை ஆகியவற்றின் தத்ருப காட்சிகள் -இந்த காட்சிகளை எல்லாம் ஓடை ல மண்ணை கொட்டி தான் செய்யணுமா ?

வடிவேல்Nov 30, 2018 - 12:35:47 PM | Posted IP 162.1*****

மொதல்ல 1m கேட் 2m கேட் பாலத்தை பொடுபா

RajeshNov 30, 2018 - 09:28:16 AM | Posted IP 162.1*****

Thank u modiji

மு.கருப்பசாமிNov 29, 2018 - 05:11:09 PM | Posted IP 172.6*****

ஐயா அவர்களுக்கு வணக்கம் இத்திட்டம் வரவேற்க வேண்டிய திட்டம் மேலும் இத்திட்டம் விரைவில் செயல் பட வேண்டும் என்பதே எங்களின் தாழ்மையான வேண்டுகோள் மேலும் இத்திட்டத்திற்கு தூத்துக்குடி காண்ட்ராக்டர்களையும் தொழிலாளர்களையும் பயண்படுத்துமாறு உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் நன்றி

கம்ப்யூட்டர் பொறியாளர்Nov 29, 2018 - 04:27:47 PM | Posted IP 172.6*****

தமிழ்செல்வன் அவர்களுக்கு மேம்பாலம் ... என்று சொல்லி வாயால் வடை சுட்டு 6 வருசமா ஓட்டியாச்சு

தமிழ்ச்செல்வன்Nov 28, 2018 - 08:53:25 PM | Posted IP 172.6*****

அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்த மேம்பாலம் என்னாச்சு?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

CSC Computer Education

Black Forest Cakes

Joseph Marketing


Nalam Pasumaiyagam

New Shape Tailors

Thoothukudi Business Directory