» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அகர்வால்குழு பரிந்துரை : வழக்கு 7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதன் 28, நவம்பர் 2018 12:34:14 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அகர்வால்குழு பரிந்துரை செய்துள்ள நிலையில், வழக்கை டிச.7ம் தேதிக்கு ஒத்திவைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பொதுமக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக கூறி ஆலையை மூட தமிழக அரசு உததரவிட்டது.  கடந்த மே மாதம் 28ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் மூலமாக சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, மேகாலயா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்.

தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தினர், சென்னை நகரிலும் விசாரணை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் இந்த ஆய்வுக்குழுவின் அறிக்கை தனித்தனியாக மூடி முத்திரையிடப்பட்ட 48 உறைகளில் வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், உறுப்பினர் நீதிபதிகள் ரகுவேந்திர ரத்தோர், எஸ்.பி.வாங்டி, கே.ராமகிருஷ்ணன், நகின் நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (புதன்கிழமை) ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்படலாம் என்றும், தமிழக அரசு ஆலையை மூடியது தவறு என்றும் தருண் அகர்வால் குழு பரிந்துரை செய்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

விசாரணையின் போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு என்றும், ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு கூறிய காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை என்றும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படாமல் ஆலை மூடப்பட்டுள்ளது என்றும்  ஆய்வறிக்கையில் அருண் அகர்வால் குழு தெரிவித்திருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. தருண் அகர்வால் குழு வழங்கிய பரிந்துரைகளை பரிசீலித்த, பசுமை தீர்ப்பாயம், இந்த அறிக்கை பற்றி 1 வாரத்தில் தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, டிசம்பர் 7ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

போராளிNov 28, 2018 - 06:09:54 PM | Posted IP 162.1*****

தலைமை போராளி அவர்கள் ஆதாரத்தை சமர்ப்பித்த கண்கொள்ளா காட்சியை தான் நம்ம பாத்தோம்ல.. இப்போ அந்த போராளிகளாம் வந்து நீதி தோற்றதுனு கருத்து சொல்லுவாங்க! நல்லா இருக்குடா உங்க நடிப்பு!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals


New Shape Tailors

Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory