» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வங்கியில் ரூ.1 கோடி மோசடி: மேலாளர் உட்பட 4பேர் சஸ்பெண்ட் - அப்ரைசருக்கு போலீஸ் வலை!!

புதன் 28, நவம்பர் 2018 11:39:13 AM (IST)

தூத்துக்குடியில் வங்கியில் ரூ.1 கோடி நகை மோசடி நடந்தது தொடர்பாக மேலாளர் உட்பட 4பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நகை மதிப்பீ்ட்டாளரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மட்டக்கடையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஏராளமானவர்கள் தங்கநகை அடகு வைத்து உள்ளனர். இந்த நகைகள் ஒவ்வொரு 3 மாதத்துக்கும் ஒருமுறை சோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி கடந்தவாரம் அதிகாரிகள் நகைகளை பரிசோதனை செய்தபோது, அங்கிருந்த சுமார் 22 பேரின் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை வைத்து மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் போலி நகை விவகாரம் பற்றிய தகவல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதையடுத்து நகையை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிடத் தொடங்கினர். ஆனால், பொதுமக்களின் நகைக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நகை மதிப்பீட்டாளர் தனது உறவினர்கள், கூட்டாளிகள் பெயரிலேயே மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும்  நகை மதிப்பீ்ட்டாளர் கீழ ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த சப்பாணிமுத்து மகன் சண்முகசுந்தரம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே நகை மோசடி தொடர்பாக வங்கி மேலாளர் உமா, ஊழியர்கள் கணேசன், கிருஷ்ணமூர்த்தி உட்பட 4பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

இந்நிலையில், டவுண் டிஎஸ்பி பிரகாஷ் மற்றும் வடபாகம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் நேற்று வங்கிக்கு சென்று அனைத்து ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர். காலை முதல் மாலை வரை இந்த விசாரணை நடைபெற்றது. இதுகுறித்து டிஎஸ்பி பிரகாஷ் கூறும்போது " நகை மோசடி தொடர்பாக முதற்கட்டமாக வங்கி ஊழியர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள நகை மதிப்பீட்டாளரை பிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவரை பிடித்தபின்னரே நகை மோசடியில் முழு விபரமும் தெரியவரும் என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD
crescentopticals

Joseph Marketing

Thoothukudi Business Directory