» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வணிகநிறுவனங்கள் 2 குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் : தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு

செவ்வாய் 20, நவம்பர் 2018 7:43:32 PM (IST)

தூத்துக்குடியில் வணிகநிறுவனங்கள் இரண்டு குப்பைத்தொட்டிகளை வைக்க மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அன்றாடம் சேரும் குப்பைகளை வீடுவீடாக சென்று மக்கும் குப்பை, மறுசுழற்சி குப்பை என பிரித்து சேகரித்து வருகிறது. மக்கும் குப்பைகளை மாநகராட்சியால் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நுண்உரமாக்கல் மையம் மூலம் இயற்கை உரம் தயாரித்து விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இப்பணிகளை திறம்பட மேற்கொள்ளவும், சுற்றுச்சுழல் மாசுபடுதலை தவிர்க்க குப்பைகளை பிரித்து சேகரிக்க வேண்டியது அவசியமானதாகும். 

குப்பைகளில் கணிசமான அளவு கடைவீதிகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மூலம் உற்பத்தியாகிறது. எனவே இம்மாநகராட்சி எல்லைக்குள் அமையப் பெற்றுள்ள அனைத்து மளிகைக்கடைகள், உணவகங்கள், மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் உணவு, காய்கறி கழிவுகள், பழங்கள் போன்ற மக்கும் குப்பைகளை தனியாக பச்சை நிற கூடைகள் அமைத்தும். காகிதம், பிளாஸ்டிக் கவர்கள், அட்டைகள், பாட்டில்கள் உள்ளிட்டவற்றை ஊதா நிறக்கூடையிலும் பிரித்து தங்கள் வணிக நிறுவனங்களுக்கு வரும் மாநகராட்சி இலகுரக வாகனங்கள் வசம் ஒப்படைக்குமாறும் மேலும் குப்பைகளை தெரு ஓரங்களில் வீசி எறியாத வண்ணம் பராமரிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீது தக்க மேல்நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Nalam Pasumaiyagam

CSC Computer Education

Black Forest Cakes

Thoothukudi Business Directory