» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் : தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அறிவிப்பு

செவ்வாய் 20, நவம்பர் 2018 6:23:14 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில், வரும் 23ம் தேதி அன்று பல்வேறு கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டத்தில் மாப்பிள்ளையூரணி கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் தெற்கு காரசேரி கிராமத்திலும், திருச்செந்தூர் வட்டத்தில் மேலஆத்தூர் கிராமத்திலும், 

சாத்தான்குளம் வட்டத்தில் கொம்மடிக்கோட்டை கிராமத்திலும், கோவில்பட்டி வட்டத்தில் வில்லிசேரி- 1 கிராமத்திலும், விளாத்திகுளம் வட்டத்தில் மேலக்கல்லூரணி கிராமத்திலும், எட்டயபுரம் வட்டத்தில் வேலிடுபட்டி கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் ஜம்புலிங்கபுரம் கிராமத்திலும் கயத்தார் வட்டத்தில் திருமலாபுரம் கிராமத்திலும், ஏரல் வட்டத்தில் மாரமங்கலம் கிராமத்திலும் 23.11.2018 (வெள்ளிக்கிழமை) அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது. 

மேற்படி முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

crescentopticals

Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory