» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செல்போன் தொலைந்ததால் இளம்பெண் தற்கொலை

செவ்வாய் 20, நவம்பர் 2018 4:27:20 PM (IST)

செய்துங்கநல்லூர் அருகே செல்போனை தொலைத்ததை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் மூப்பனார் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (எ) வண்டி மலையான் (53). கொத்த வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நாகமணி. இந்த தம்பதியருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகன் சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். மகள் சின்னத்தாய் என்ற சிந்து(20) பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்நிலையில், ரூ.10 ஆயிரத்திற்கு புதிதாக வாங்கிய ஆண்ட்ராய்ட் செல்போன் தொலைந்ததால் சிந்து மனம் உடைந்து காணப்பட்டாராம். மேலும் இதனால் அவரது தாயார் திட்டினாராம். இதனால் மேலும், வேதனையடைந்த சிந்து  இன்று அதிகாலை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது தந்தை சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Joseph Marketing

New Shape Tailors

Anbu Communications


CSC Computer Education

Black Forest Cakes

Thoothukudi Business Directory