» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை

செவ்வாய் 20, நவம்பர் 2018 4:17:25 PM (IST)

கருங்குளம் அருகே பக்கவாதம் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த முதியவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகே மேல திரியந்தூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பார்வதி மகன் காசி (70). இவருக்கு ஐந்து மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆறு மாத காலமாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். 

இதனால் மனமுடைந்த அவர் நேற்று மதியம் அவரது பம்புசெட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்துவிட்டார். இதுகுறித்து அவரது மகன் பார்வதி(31) அளித்த புகாரின் பேரில் சேரகுளம் காவல்நிலைய போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

CSC Computer Education

Nalam Pasumaiyagam


Anbu CommunicationsThoothukudi Business Directory