» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நவ.21-ல் மது விற்பனைக்கு தடை: ஆட்சியர் அறிவிப்பு

சனி 17, நவம்பர் 2018 3:30:17 PM (IST)

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு வருகிற 21ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் நபிகள் நாயகம் பிறந்த தினமான மிலாடி நபி பண்டிகைக்காக தமிழக அரசால் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ள 21.11.2018 அன்று தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை ( கடை / பார் ) விதிகள் 2003 விதி 12 துணை விதி (1)-ன் படி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் அனைத்து எப்.எல்.2., மற்றும் எப்.எல்.3 உரிமதலங்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின்கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ஒருவன்Nov 18, 2018 - 09:41:30 AM | Posted IP 172.6*****

அரசு காசுக்காக மட்டும் டாஸ்மாக் ஐ மட்டும் நம்பி சுறுசுறுப்பா வேலை பார்ப்பாங்களாம் ..

வடிவேல்Nov 17, 2018 - 05:16:35 PM | Posted IP 172.6*****

அப்போ ஏன் ஐயா தீபாவளிக்கு மூடல?

சாமான்யன்Nov 17, 2018 - 04:15:29 PM | Posted IP 172.6*****

மாநில அரசே! ஏசு பிரான் இறந்த புனித வெள்ளிக்கு அடைக்காதது ஏன்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticalsThoothukudi Business Directory